அக்கா சமாதிக்கு போக முடியலயே' கண்ணீர் விட்ட சசி... காம்ப்ரமைஸ் பண்ணிய விவேக், ஜெய் ஆனந்த்...

 
Published : Oct 13, 2017, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
அக்கா சமாதிக்கு போக முடியலயே' கண்ணீர் விட்ட சசி... காம்ப்ரமைஸ்  பண்ணிய விவேக்,  ஜெய் ஆனந்த்...

சுருக்கம்

sasikala back to bangalore jail

சென்னை குளோபல் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வந்த சசிகலா, சிறை விதிகள்  காரணமாக ஜெயலலிதாவின் சமாதிக்கு போக முடியவில்லையே என கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

பரோல் முடிந்து நேற்று  நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்பினார் சசிகலா.. அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சசிகலா, வீட்டிலேயே அரைமணி நேரத்துக்கு மேலாகப் பூஜைகளைச் செய்திருக்கிறார்.

பரோலில் வந்து உங்க எல்லோரையும் பார்த்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. ஆனால், அக்கா சமாதிக்கு போக முடியலை. கார்டனுக்குள்ளயும் கால் வைக்க முடியலை. இதையெல்லாம் நினைச்சாதான் தாங்க முடியலை...’ என்று  சசிகலா கதறி  அழுதிருக்கிறார். இளவரசியின் மகள்கள்தான் அவரைச் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.

நேற்று  முன்தினம் இரவு வேறு கார் ஒன்றில் ஜெயலலிதா சமாதி வரையிலாவது போய் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு வந்துவிடலாம் என சசிகலா கேட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால், விவேக்கும், ஜெய் ஆனந்தும்தான், ‘போலீஸ் நம்மை கவனிச்சிட்டே இருக்கு. ஜெயில் ரூல்ஸ்படி நாம இப்போ நடந்துகிட்டா, திரும்ப பரோல் வாங்க வசதியாக இருக்கும். இல்லைன்னா அடுத்த முறை பரோல் கேட்டால், இதைக் காரணம் காட்டி கொடுக்க மறுத்துடுவாங்க...’ என சொல்லி அவரை சமாதானப்படுத்தினார்களாம்.

காலையில் கிளம்பும்போதும்கூட, ‘சமாதி இருக்கும் வழியில் போகலாமா’ என சசிகலா கேட்டதாக சொல்கிறார்கள். அப்போதும் விவேக்தான் சமாதானப்படுத்தி இருக்கிறார். அரை மனதுடன் கிளம்பிய சசிகலா ஜெயலலிதா சமாதியை பார்க்க முடியவில்லையே என கண்கள் கலங்கிய நிகழ்வு அங்கிருந்தவர்களையும் கலங்கச் செய்ததது.

 

PREV
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்