அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 2:23 PM IST
Highlights

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது கிடையாது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது 100% வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது கிடையாது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது 100% வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் கடைசி நாளான இன்று கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதை பார்க்கலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும் பார்க்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல் போகும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் செயல்படுகின்றனர்.

எங்களை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை. அமமுக, சசிகலாவையும் அதிமுகவில் இணைப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இது தான் உறுதியான நிலை. எங்கள் தலைமையில் கூட்டணி என்பது எள்ளி நகையாடக்கூடியதாக உள்ளது. அதிமுக சிங்கங்கள் கூட்டம். அமமுக குள்ளநரிகள் கூட்டம். தினகரன் கருத்தை நகைச்சுவையாக மக்கள் பார்ப்பார்கள்.

அதிமுக உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை தான் பாஜக கடைபிடிக்கிறது. சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து யோசனையாக தெரிவித்திருக்கலாம். அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். சசிகலாவை இணைப்பது குறித்து முதல்வரிடம் அமித்ஷா எதையும் தெரிவிக்கவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

click me!