12 தொகுதிகள் வேண்டும்.. காரணத்துடன் கோரிக்கை வைத்த தமாகா.. செய்வதறியாது திகைக்கும் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2021, 2:21 PM IST
Highlights

அதற்காக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி உடன் தமாக துணை தலைவர் கோவை தம்பி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

சைக்கிள் சின்னத்தை மீட்க வேண்டியிருப்பதால் 12 தொகுதிகளை வழங்க வேண்டும் என தமாகா அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளது என அக்கட்சியின் துணை தலைவர் கோவை தம்பி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.  பாமக மட்டுமே முன்கூட்டியே தொகுதியை இறுதி செய்துள்ள நிலையில், இன்று பாஜகவும் தனக்கான தொகுதியை இறுதி செய்துள்ளது. இன்று மாலைக்குள் தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான தமாகா உடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. 

அதற்காக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி உடன் தமாக துணை தலைவர் கோவை தம்பி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தை வெறும் 10 நிமிடங்களில் நிறைவடைந்தது.  பின்னர் தமாக துணை தலைவர் கோவை தம்பி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்,  அதிமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை உறுதி செய்யவே அமைச்சர்களை சந்திக்க வருகைதந்தோம். 

2001 ல் எங்கள் தலைவர் மூப்பனார் பெற்றுத்தந்த சைக்கிள் சின்னத்தை மீண்டும் பெற தங்களுக்கு 12 தொகுதிகள் தேவைப்படுகிறது. இந்த காரணத்துடன் நாங்கள் அதிமுகவிடம் 12 தொகுதிகளை கோரியுள்ளோம். மேலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் எங்கள் விருப்பத்தினை அமைச்சர்களிடத்தில் முன் வைத்துள்ளோம். மேலும் எங்களது கோரிக்கை தொடர்பாக முதல்வரிடத்தில் கலந்து பேசி உரிய பதில் அளிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு த.மா.கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

 

click me!