ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பமே காரணம்! சூடு பிடிக்கும் வாக்குவாதம்!   

 
Published : Sep 16, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பமே காரணம்!  சூடு பிடிக்கும் வாக்குவாதம்!   

சுருக்கம்

sasikal family is the reason for jayalalitha death

ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பமே காரணம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூற, ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து முற்றிலும் பொய் என வெற்றிவேல் எம்.எல்.ஏ பதிலளித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே அடுத்த கட்ட வாக்குவாதமாக இப்போது ஜெயலலிதா மரணம் குறித்த ரகசியங்கள் வெளித் தளத்துக்கு வந்துள்ளன.

வீட்டுக்குப் போவது யார், மாமியார் வீட்டுக்குப் போவது யார் என்று இரு தரப்பும் வாக்கு வாதம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஜெயலலிதா மரணம் குறித்த வாக்குவாதம் முளைத்துள்ளது.  இது குறித்து திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியபோது, “
ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், தினகரனும் தான் காரணம், எங்கள் யாரையும் அப்பல்லோ மருத்துவமனைக்கு  உள்ளேயே அனுமதிக்கவில்லை. 

அதிமுகவில் உறுப்பினராகக் கூட இல்லாத தினகரன் எங்களை நீக்குவேன் என்று கூறி வருகிறார். அவர் வெகு விரைவில் மாமியார் வீட்டுக்குச் செல்லும் காலம் வரப் போகிறது” என்றார். 

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியபோது, சசிகலா குடும்பத்தினர்தான், ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் என தமிழக மக்கள் பேசுகின்றனர். சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம். ஆனால், நோய் முற்றி இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என அவர்கள் விட்டுவிட்டனர். உண்மையைப் பேசி விடுவார் என்பதற்காகத்தான், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி,  மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் எனப் பலர் வந்து பார்த்தும், யாரையும் பார்க்க விடவில்லை” எனப் பேசினார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தியாகத்திற்காகவே  எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதுவிஷயத்தில் அவதூறாகப் பேசினால், அவர் மீது வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து முற்றிலும் பொய்” என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!