
சாரணர் சாரணியர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா படுதோல்வி அடைந்துள்ளார்.
எச் .ராஜா மற்றும் முன்னாள் பள்ளி கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணி உட்பட பலரும் இந்த சாரணர் சாரணியர் இயக்கத்தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர் இதில் மொத்தம் உள்ள 286 வாக்காளர்களில், பள்ளி கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணி 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் 2 வாக்குகள் செல்லாத ஓட்டுகள் என அறிவிக்கப்பட்டது.இந்த தகவலை சாரணர் சாரணியர் இயக்க தேர்தல் அதிகாரி கலாவதி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா 52 வாக்குகள் மட்டுமே பெற்று படு தோல்வி அடைந்தார்.முன்னதாக, சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக பல முயற்சிகளை எச்.ராஜா மேற்கொண்டு வந்தார் என அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்தன. குறிப்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர் மீது குற்றம் சாட்டி வந்தார்
இந்நிலையில் எச்.ராஜா வெறும் 46 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது