
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், கடும் கொந்தளிப்பில் இருக்கிறது சசிகலா குடும்பம்.
மோடி இருக்கும் வரை நம்மை வாழவே விடமாட்டாரா? என்று அவரை கடுமையாக சபித்து வருகின்றனர் அவர்கள்.
நம்மை நெகட்டிவ் போர்சாக கருதும் டெல்லி, நாம் குனிந்தாலும் அடிக்கிறது, நிமிர்ந்தாலும் அடிக்கிறது என்று மிகவும் கலங்கியுள்ளார் சசிகலா குடும்பத்தின் மூத்தவர் ஒருவர்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கி மீண்டும் ஒருமுறை நம்மை அடித்திருக்கிறார்கள் என்று உருகிய அவர், இதைவிட நம்மை எப்படி அவமானப்படுத்த முடியும்? என்றும் வருந்தியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே நாம் டெல்லியை உறுதியாக எதிர்த்திருந்தால், தி.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் நம்மை விட்டு விலகி இருக்காது என்றும் அவர் பொங்கி இருக்கிறார்.
நம்மால் அவர்களுக்கு ஆக வேண்டிய காரியம் என்று எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க ஆதரித்தாலே பா.ஜ.கவுக்குப் போதுமானது. நம்முடைய ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இனி சின்னத்தை மீட்கவும், கட்சியை காப்பாற்றவும் என்ன பாடு படப்போகிறோமோ என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.
சசிகலா சிறைக்கு போகும்போது கூட இந்த அளவுக்கு யாரும் வருந்தவில்லை என்றே சொல்லப்படுகிறது.