
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா தற்போது பரோலில் வெளிவந்துள்ளார்
உடல்நலக் குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனைக் காண, 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை வந்த சசிகலா, டி.நகரில் உள்ள இளவரசியின் மகளான கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கி உள்ளார்.பின்னர் இன்று காலை சரியாக 11 மணிக்கு குளோபல் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் நடராஜனை காண்கிறார்.
233 நாட்களாக ஜெயிலில் இருந்து தற்போது வெளிவந்துள்ள, சசிகலா, இந்த 5 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, சசிகலா ஆதரவாளர்கள் சில முக்கிய நபர்கள் அவரை சந்திக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது