மிஸ்டர் விஜய்… நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தாலே ஸ்டைலாதான் இருக்கீங்க… ஆனா சொன்ன வார்த்தைய மீறீட்டீங்களே… அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்….

Asianet News Tamil  
Published : Jun 22, 2018, 10:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மிஸ்டர் விஜய்… நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தாலே ஸ்டைலாதான் இருக்கீங்க… ஆனா சொன்ன வார்த்தைய மீறீட்டீங்களே… அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்….

சுருக்கம்

sarkar first look poster anbumani condumned about the poster

திரைப்படங்களில் இனி புகை பிடிப்பதைப்போல் நடிக்க மாட்டேன் என்று பிராமிஸ் பண்ணிய நடிகர் விஜய் தனது சர்க்கார் படத்தில் அத்தகைய காட்சியில் நடித்திருப்பது தன்னை அவமானப்படுத்துவ போல் உள்ளது என்றும் சிகரெட் பிடிக்காமலேயே நீங்கள் ஸ்டைலாகத்தான் இருக்கிறீர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது நடிகர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். . அதனை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய் இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தார். 

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் சர்க்கார்  திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் நேற்று மாலை  வெளியானது.  இதில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டு புகையை ஊதித்தள்ளும் காட்சி இடம்பெறுள்ளது. இந்த ஃபர்ஸ்லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக ஷேர் பண்ணி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து இன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் என்பதால் நள்ளிரச 12 மணிக்கு மற்றொரு போஸ்டரும் வெளியிடப்பட்டது.



இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சர்கார் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி டுவிட்டர்ல்  கருத்து தெரிவித்துள்ளார். 
அதில் நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன்.” என்றும் “அந்த சிகரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் விஜய் தான் சொன்னதை வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சிகரெட்டை புகையவிட்டுக்கொண்டு போஸ் கொடுத்திருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சியில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியது பற்றி முன்னர் வெளியான செய்தியையும் சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணைத்துக் காட்டும் போட்டோவையும் தனது ட்விட்டரில் அன்புமணி பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!