
எம்.எல்.ஏக்களுக்கு குதிரை பேரம் நடைபெற்றதாக வெளிவந்த வீடியோ குறித்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல உச்சகட்ட குழப்பங்களும் மர்மங்களும் நீடித்து வருகின்றன. 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்த ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே நீடித்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் இடையே எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேசுவதில் பெரிய போர்களமே நடைபெற்று வந்தது.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் கொண்டு சென்று ரிசார்ட்டில் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். அதில் 12எம்.எல்.ஏக்கள் தப்பித்து வந்து ஒ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்தனர்.
அப்போது முதல் ஆளாக வெளியே வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ஆவார். ஆனால் தற்போது எம்.எல்.ஏக்களை இழுப்பதில் குதிரை பேரம் நடைபெற்றதாக அவர் பேசிய வீடியோ வெளியே வைரலாகி உள்ளது.
இதனால் தமிழகத்தை மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இதுகுறித்து சரவணனிடம் விளக்கம் கேட்ட்கபட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வீடியோ குறித்தும் அவர் பேசியது குறித்தும் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சரவணன் விளக்கம் அளித்து வருகிறார்.