"தினகரன் ஆதரவாளர்கள்தான் என்னை தாக்கினார்கள்" - கமிஷனர் அலுவலகத்தில் தீபா பரபரப்பு புகார்

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
"தினகரன் ஆதரவாளர்கள்தான் என்னை தாக்கினார்கள்" - கமிஷனர் அலுவலகத்தில் தீபா பரபரப்பு புகார்

சுருக்கம்

deepa complaint on dinakaran about opes garden attack

சென்னை போயஸ் தோட்டத்தில் நேற்று முன்தினம் தன்னை தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெயலலிதாவின்  அண்ணன் மகன் தீபா சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் தன்னுடைய சகோதரர் நேற்று முன்தினம் தன்னை போயஸ் தோட்டத்துக்கு வருமாறு செல்போனில் அழைத்தாக குறிப்பிட்டுள்ளார்.

தங்களது அத்தை ஜெயலலிதா இறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், அதனால் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று அவர் அழைத்தாக தீபா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காலை ஒன்பதரை மணிக்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுடன் போயஸ் தோட்டத்திற்குள் தான் நுழைந்ததாக தெரிவித்துள்ளார். 

அப்போது டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை தாக்கினார்கள் என்றும் ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு தன்னையும் அவர்கள் தாக்கியதாக அந்த புகாரில் தீபா தெரிவித்துள்ளார்.

கோதண்டராமன் என்பவர் உள்ளிட்ட 6 பேர் தன்னையும், தன்னுடன் வந்த 12 பேரையும் தாக்கி வெளியே தள்ளினார்கள் என தீபா தெரிவித்துள்ளார்.

தன்னையும், தனது நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையயாளர்களை தாக்கியவர்கள் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீபா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!