அந்த ஐடியாவை ஃபாலோ பண்ணிருந்தா இப்படி ஆயிருக்குமா? சமக சரத்குமார் வேதனை

By sathish kFirst Published Jun 15, 2019, 3:23 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் இப்போது உள்ள  தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என சமக சரத்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.
 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் இப்போது உள்ள  தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என சமக சரத்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது தண்ணீர் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து தாண்டவமாடுகிறது.

பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது.  ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகிறது, பள்ளியிலும் மாணவர்களை பாட்டிலில் தண்ணீர் எடுத்துவர சொல்லியிருக்கிறது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமக தலைவர் சரத்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் இப்போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது என்றார்.மேலும், நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால், யாருக்கு ஆதரவு என்பது குறித்து கருத்து கூற முடியாது. நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து என கூறினார். 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியளர்களை சந்தித்த சமக தலைவர் சரத்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது என்றார். தண்ணீர் பிரச்சனையைப் பொருத்த வரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இருவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.  

click me!