வரி ஏய்ப்பு வழக்கில் சரத்குமார் மீண்டும் ஆஜர் - விடாத வருமான வரித்துறை

 
Published : Apr 13, 2017, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
வரி ஏய்ப்பு வழக்கில் சரத்குமார் மீண்டும் ஆஜர் -  விடாத வருமான வரித்துறை

சுருக்கம்

sarathkumar appeared in income tax dept office

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில்  நடிகர் சரத்குமார் மீண்டும் ஆஜராகி உள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு சரத்குமார் திடீரென ஆதரவு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது பல முக்கிய ஆவணங்களும், ரூபாய் நோட்டுகளும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து அவரிடம் இரண்டு கட்டங்களாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் சரத்குமார் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.  

இதற்கிடையே வரி ஏய்ப்பு வழக்கு விசாரணைக்காக சரத்குமார் மூன்றாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!