
இரட்டை இலை சின்னம் குறித்து ஆவணம் தாக்கல் செய்ய , சசிகலா தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் கால அவகாசம் கேட்கப் பட்டுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட்டது . சசிகலா ஒரு அணியாகவும், பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் பிரிந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதா இறந்தபின், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் பணபட்டுவாடா தொடர்பாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம்
இந்நிலையில் அதிமுக கட்சி இரண்டாக பிரிந்ததால், அதிமுக அம்மா கட்சி சசிகலா அணியினருக்கும், அதிமுக புரட்சிதலைவி அம்மா என்ற கட்சி பன்னீர் செல்வத்திற்கும் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் இந்த இரண்டு கட்சியினரிடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கடும் போட்டி நிலவியது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது .
அதன் பின், இரட்டை இலை சின்னம் குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்வதகு 8 வார கால அவகாசம் கேட்டு , சசிகலா தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .