சரத்பவார் மோடியை ஆதரித்ததன் எதிரொலி! அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் முக்கிய தலைவர்கள்!

By Selvanayagam PFirst Published Sep 29, 2018, 8:57 PM IST
Highlights

   ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து 2 முக்கிய தலைவர்கள் விலகியுள்ளனர்.

மராட்டிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்த சரத்பவார், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை எதிர்கட்சிகள் கோருவது அறிவுடைமை இல்லை என்று தெரிவித்தார். மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி தவறு செய்திருக்க மாட்டார் என்றே நாட்டு மக்கள் கருதுவதாகவும் சரத்பவார் கூறினார். ரஃபேல் ஒப்பந்தத்தை முன் வைத்து எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து மோடிக்கு கடும் நெருக்கடி கொடுத்த வருகின்றன.

   இந்த நிலையில் மராட்டியத்தில் பா.ஜ.கவின் முக்கிய எதிர்கட்சியும், காங்கிரசின் தோழமை கட்சியுமான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மோடிக்கு ஆதரவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சரத்பவாரின் பேச்சை அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளே விரும்பவில்லை. சரத்பவார் பேட்டி ஒளிபரப்பானதுமே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹக்கீம் ராஜினாமா செய்தார்.

   தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக ஹக்கீம் சரத்பவாருக்கு கடிதம் எழுதினார். ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு எதிர்கட்சிகள் ஒன்றாக இருந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சரத்பவாரின் பேட்டியால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இமேஜே சரிந்துவிட்டதாக ஹக்கீம் தெரிவித்தார். இவரை தொடர்ந்து அந்த கட்சியின் எம்.பியான தரிக் அன்வரும் விலகியுள்ளார்.

   இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என் என்றால் தரிக் அன்வர், தேசிய வாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர். மேலும் அவர் தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் சரத்பவார் இதற்கு எல்லாம் கவலைப்படவில்லை. தனது பேட்டியை முழுமையாக பார்க்காமல் இருவரும்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் தெரிவித்துள்ளார்

click me!