'திமுக- அதிமுகவை விட்டுட்டு வாங்க கேப்டன்...' விஜயகாந்துக்கு திடீர் அழைப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2019, 11:56 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் தேமுதிக கூட்டணி அமைக்குமா? என்கிற கேள்வி தமிழக அரசியல் கட்சிகளை கடந்த சில வாரங்களாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணி வேண்டாம். புதிய கூட்டணி அமைக்கலால் என தேமுதிகவுக்கு சரத் குமார் அழைப்பு விடுத்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் தேமுதிக கூட்டணி அமைக்குமா? என்கிற கேள்வி தமிழக அரசியல் கட்சிகளை கடந்த சில வாரங்களாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணி வேண்டாம். புதிய கூட்டணி அமைக்கலால் என தேமுதிகவுக்கு சரத் குமார் அழைப்பு விடுத்துள்ளார். 

கூட்டணியை உறுதி செய்யாத தேமுதிகவை கடந்த சில தினங்களுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம் நடப்பு அரசியல் குறித்து பேசியதாகவும், அவர் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் சரத்குமார் தெரிவித்தார். இந்நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குவதாக சமக அறிவித்தது. 

இந்நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தை கட்சி தலைவர் சரத்குமார் திறந்து வைத்து பேசினார். ’’நான் அரசியலுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிறது. அதிமுக, திமுகவுக்காக வாக்குகளை சேகரித்து வந்துள்ளேன். தற்போது முதல் முறையாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தேன். நீங்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்.

கஜா புயல் பாதித்த தமிழகத்தை வந்து பார்க்காத பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வந்ததும் அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இதனால் தான் நாங்கள் தனியாக நிற்பது என்று முடிவு செய்துள்ளோம். நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக நிதி அமைச்சர் பற்றியும், தமிழக அரசை பற்றியும் குறை கூறி வந்தனர். அதிமுக, பாமக கூட்டணி மக்களை பற்றி சிந்திக்காமல் தங்களை மட்டுமே சிந்தித்து உருவான கூட்டணி. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

அதேபோல் திமுக., காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் அமைத்துள்ள கூட்டணியானது, அதிமுக அமைத்த கூட்டணி போன்றதுதான். தமிழகம் வளர்ச்சி அடைய, ஊழல் இல்லா நல்லாட்சி மலர, புதிய மாற்றம் ஏற்பட ஒத்த கருத்துடைய கட்சிகள், தேமுதிகவாக இருந்தாலும் சரி, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை நோக்கி செல்கிறோம்.

 

தமிழகத்தில், 'கஜா' புயல் போன்றவற்றுக்கு, ஆறுதல் கூற கூட வராத பிரதமர் மோடி, பதவி ஆசையில் தேர்தலுக்கு மட்டும் வருகிறார். மத்தியில் சிறப்பான ஆட்சியை தருகிறோம் என, சொல்லும், பாஜக,வுக்கு, தனித்து போட்டியிட திராணி இல்லை.கீழ்த்தரமாக பேசும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை. தேமுதிக, தலைவர் விஜயகாந்த் விருப்பம் தெரிவித்தால், அவருடன் கூட்டணி சேர்ந்து, தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன். எனவே வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்தார்.

click me!