
பெங்களூரு பரப்பரன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் பெற பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று அதிமுக அம்மா கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, பரப்பரன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதற்காக லஞ்சம் பெற்றதாகவும், சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவுக்கு எதிராக அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் ரூபா குறிப்பிட்டிருந்தார்.
சிறைத்துறை அதிகாரி ரூபாவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து டிஜிபி சத்யநாராயணராவ், செய்தியாளர்களிடம் பேசும்போது, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் ஏதும் வழங்கவில்லை என்றும், சமையல் அறை எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிறைத்துறை அதிகாரி ரூபா, டிஜிபி சத்யநாராயணாவிடம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை என்றும் இதனால் எனக்கு லாபமும் இல்லை என்றும் கூறினார். டிஜிபி சத்யநாராயணா லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும் இது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
சிறைத்துறை அதிகாரி ரூபாவின் புகார் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக அம்மா கட்சியின் பொது செயலாளர் சசிகலா, பெங்களூரு சிறைச்சாலையில் சலுகைகளைப் பெற பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, சிறைச்சாலையின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அங்கு வழங்கப்படும்உணவு வகைகளை மட்டு சசிகலா எடுத்துக்கொள்வதாகக் கூறினார். சசிகலா பெங்களூரு சிறையில் சலுகைகள் பெற பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.