#BREAKING மக்கள் நீதி மய்யத்தின் கூடாராம் காலியாகிறது.. பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு ராஜினாமா..!

Published : May 13, 2021, 02:11 PM ISTUpdated : May 13, 2021, 02:28 PM IST
#BREAKING மக்கள் நீதி மய்யத்தின் கூடாராம் காலியாகிறது.. பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு ராஜினாமா..!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுகிறேன் என சந்தோஷ் பாபு திடீரென அறிவித்துள்ளது கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுகிறேன் என சந்தோஷ் பாபு திடீரென அறிவித்துள்ளது கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த  சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.

அப்போது, சந்தோஷ் பாபுவும் விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால், தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன் என்று சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது எனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் எனக்கு அளித்த பாசத்திற்கும், நட்பிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?