தேர்தல் முடிவுகள் பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு விழுந்த அடி ! வெளுத்து வாங்கிய சிவசேனா !!

By Selvanayagam PFirst Published Oct 26, 2019, 8:17 AM IST
Highlights

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள், பாஜகவின் சர்வாதிகாரதனத்துக்கு விழுந்த மரண அடி' என, சிவசேனா அதிரடியாக தெரிவித்துள்ளது.
 

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 288 தொகுதிகளில், 161 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை, பா.ஜ., - சிவசேனா கூட்டணி தக்க வைத்துள்ளது.இந்த கூட்டணி, 200 இடங்களுக்கு மேல் பிடித்து அபார வெற்றி பெறும் என, கூறப்பட்ட நிலையில், கடந்த தேர்தலைவிட குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் பற்றி, சிவசேனா கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில் , ஆட்சியில் இருந்தவர்களின் சர்வாதிகாரத்தனமான செயல்பாட்டுக்கு, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், மரண அடி கொடுத்து உள்ளது. எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலம், தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தவர்களுக்கு, இந்த தேர்தல் முடிவு, பெரும் பாடம் கற்பித்துள்ளது.

எதிர்க்கட்சிகளை ஒழித்துவிட முடியாது என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி யுள்ளது. சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரசை, பாஜக சுக்கு நுாறாக உடைத்து, அந்த கட்சி, இனி தலை துாக்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தேசியவாத காங்கிரஸ், கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜகவின் ஆசையை தவிடுபொடியாக்கிவிட்டது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பதவிக்காக, கட்சி மாறியவர்களுக்கு, மகாராஷ்டிரா மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்.

பாஜக முதல்வரை விட தனக்கு செல்வாக்கு அதிகம் என, சரத்பவார் நிரூபித்துள்ளார். அதிகார துஷ்பிரயோகத்தை, மகாராஷ்டிரா மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது, மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று சிவனோ சகட்டு மேனிக்கு விளாசித் தள்ளியுள்ளது.

click me!