அராஜக தேச பக்தி எப்போதுமே தோல்வி அடையும் ! ப. சிதம்பரம் அதிடிடி டுவீட் !!

By Selvanayagam PFirst Published Oct 25, 2019, 11:50 PM IST
Highlights

அராஜக தேச பக்தியை அமைதியான முறையில் வீழ்த்துவோம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

இதன் முடிவுகள்  நேற்று  அறிவிக்கப்பட்டன. பாஜக 103, சிவசேனா 56 என இந்தக் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களில் ஜெயித்துள்ளது.

ஹரியானாவைப் பொறுத்தவரை பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது,

இதன்மூலம் இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், இது குறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அராஜக தேச பக்தியை அமைதியான தேச பக்தி வீழ்த்தும் எனத் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் யாருக்கு என்னும் போட்டி பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவிவருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கி சிதம்பரம் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!