2வது அலையில் செய்த அதே தவறு.. முறையற்ற சிகிச்சை,முறையற்ற மருத்துகளால் பேராபத்து. 35 மருத்துவர்கள் பகீர் கடிதம்

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 9:14 AM IST
Highlights

கடந்த 2 வாரமாக நாங்கள்  மதிப்பாய்வு செய்ததில் பெரும்பாலான மருந்து சீட்டுகளில் அவசியமற்ற மருத்துகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன, அசித்ரோமைசின் டாக்ஸிசைக்கிளின், ஹைட்ராக்ஸிக்கிலோராக் குயின், பேவிபிராவிர்,  ஐவர்மெக்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் மருந்துகளை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என தொற்று நோய் நிபுணர் கனடா மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மதுகர்-பை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இரண்டாவது அலையின்போது செய்த அதே தவறுகளை மத்திய அரசு திரும்ப செய்கிறது என 35 மருத்துவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் பல வெளிநாட்டு மருத்துவர்களும் அடங்குவர். அதாவது அவசியமற்ற சிகிச்சைகளை, அர்த்தமற்ற பரிசோதனைகளை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை  உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனவைரஸ் மூன்றாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்து வருகிறது. உருமாறிய டெல்டா வைரஸ் இரண்டாவது அலையாக பரவிய நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரஸ் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 5,753  பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் 35 உயர்மட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஏஎஸ்) ஆகியவற்றிற்கு கோவிட் நோய்த்தொற்றின் 3வது அலையின் ஆதாரம் சார்ந்த பதில் வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையில்லாத மருந்து மாத்திரைகள் மற்றும் பரிசோதனைகளை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். எந்தக் காரணமும் இல்லாமல் மக்களை மருத்துவமனையில் அனுமதிப்பது கவலை அளிப்பதாகவும் அவர்கள் அதில்கூறியுள்ளனர். இரண்டாவது அலையின்போது செய்த அதே தவறை மீண்டும் அரசு செய்கிறது என்றும் மருத்துவர்கள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர். 2021 தவறுகள் 2022லும் தொடர்கிறது என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்தில் ஹார்வர்ட் மற்றும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சில இந்திய வம்சாவளி மருத்துவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி செய்தால் 2021 நடந்த தவறுகள் 2022-ல் மீண்டும் நிகழும் என்றும் இந்த மருத்துவ குழு எச்சரித்துள்ளது. முறையற்ற மருந்தை, முறையற்ற சோதனைகள் மற்றும் முறையற்ற முறையில் மருத்துவமனையில் அனுமதித்தல் தேவையில்லாத பாதிப்புகளை உருவாக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்த மருந்தும் அவசியமில்லை என்றும், பெரும்பாலான covid-19 தொற்றுகள் இப்போது லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டுள்ளது

கடந்த 2 வாரமாக நாங்கள்  மதிப்பாய்வு செய்ததில் பெரும்பாலான மருந்து சீட்டுகளில் அவசியமற்ற மருத்துகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன, அசித்ரோமைசின் டாக்ஸிசைக்கிளின், ஹைட்ராக்ஸிக்கிலோராக் குயின், பேவிபிராவிர்,  ஐவர்மெக்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் மருந்துகளை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என தொற்று நோய் நிபுணர் கனடா மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மதுகர்-பை தெரிவித்துள்ளார். இத்தகைய மருந்துகளின் பயன்பாடு காரணமாக டெல்டா இரண்டாவது அலையின்போது பூஞ்சை பாதிப்பு உண்டானது என்றும் எச்சரித்துள்ளனர். அர்த்தமற்ற சி.டி ஸ்கேன் மற்றும் டி-டைமர் சோதனைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பெரும்பாலான covid-19 நோயாளிகளுக்கு விரைவான ஆன்டிஜென் அல்லது ஆர்டிபிசிஆர் சோதனை மற்றும் அவர்களின் ஆக்சிஜன் அளவை வீட்டிலிருந்து கண்காணிப்பது மட்டும் போதுமானது என்றும், ஆனால் இதற்குப் பிறகும் அவர்களுக்கு சிடி ஸ்கேன் மற்றும்  டி- டைமர் பரிசோதனைகள் அவசியமற்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

ILR போன்ற விலையுயர்ந்த ரத்தப் பரிசோதனைகளை செய்யுங்கள் என்று நோயாளிகளை கூறுவதுடன், அவர்களை மருத்துவமனையில் அனாவசியமாக அனுமதிக்கப்படுவது அவர்களின் குடும்பத்தின் மீது நியாயமற்ற நிதிச்சுமையை ஏற்படுகிறது என்றும், இதுபோன்ற சோதனைகள் மற்றும் தேவையற்று மருத்துவ மனைகளின் அனுமதிக்கப்படுவதால் குடும்பத்தினர் மன உளைச்சல் மற்றும் நிதிச்சுமைக்கு குடும்பம் தள்ளப்படுகிறது என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

click me!