திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரீனாவில் உள்ள அண்ணா நினைவகம் பின்புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்ச கணக்கில் மக்கள் திரண்டு வந்து கலைஞர் மீது வைத்திருந்த அளவு கடந்த பாசத்தையும், மரியாதையையும் நிரூபித்து விட்டனர். பல மாநில முதல்வர்கள் முதல் தேசிய கட்சித்தலைவர்கள் வரை இறுதி சடங்கில் பங்கேற்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இறப்பு தேதி மற்றும் கருணாநிதியின் இறப்பு தேதியின் கூட்டு தொகையும் ஒன்றாகவே வந்தது. (Jayalalitha - 5.12.2016 = 2033) இதன் கூட்டுத்தொகை 2033 (Karunanidhi - 7.8.2018 = 2033) இதன் கூட்டுத்தொகை 2033 இருவரும் ஒரே மாதிரியான சந்தன பேழையில், அடக்கம் செய்யப்பட்டுள்ளதும் ஒரு ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு, 6அடி நீளம், 2 1/2 அடி அகலமும் கொண்ட சந்தன பேழையின் மேல் பகுதியில் "புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா" என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதே போல் திமுக தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவ அமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2 1/2 அடி அகலதில் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் பெட்டியின் மேல் ஒரு புறம், 'கலைஞர் மு.கருணாநிதி, திமுக. தலைவர், 3.6.1924 - 7-8.2018" என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதி இருவருக்குமே ஒரே மாதியான சந்தன பேழைகளை உருவாக்கியது, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 'ஹோமேஜ்' நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.