தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு...! ஒரே நாளில் எடப்பாடி - ஆளுநர் சந்திப்பு! ஓபிஎஸ் பிரஸ் மீட்! என்ன நடக்கிறது?

Published : Oct 05, 2018, 08:25 PM ISTUpdated : Oct 05, 2018, 08:27 PM IST
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு...!  ஒரே நாளில் எடப்பாடி - ஆளுநர் சந்திப்பு! ஓபிஎஸ் பிரஸ் மீட்!  என்ன நடக்கிறது?

சுருக்கம்

தினகரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   

தினகரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் போது, தன்மீது தினகரன் முன் வைத்த குற்றங்களை பன்னீர் செல்வம் மறுத்தாலும், நல்ல விஷயத்துக்காக தான் தினகரனை சந்தித்தது உண்மை தான் என்றும், தினகரன் மனம் மாறி என்னிடம் பேசுவார் என்கிற எதிர்பாப்பில் தான் அவரை சந்தித்ததாகவும், அதற்க்கு எதிர்மாறாக அவர் பேசியதால் தான் உடன்பட வில்லை என கூறினார். 

தினகரனை, பன்னீர் செல்வம் சந்தித்ததாக அவரே கூறியுள்ள தகவல் தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தி, தொலைக்காட்சிகள் விவாதிக்க கூட பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. 

ஆட்சி களைப்பு:

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பாஜக கட்சியுடன் இணைந்து, பன்னீர் செல்வம் ஆட்சியை கலைக்க முட்படுவதாக புகாரை முன் வைத்தார் தினகரன்.

ஆளுனருடன் சந்திப்பு:

தற்போது  திடீர் என ஒரே நாளில் தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்திப்பதும்... பன்னீர் செல்வம் தினகரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்ததும் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கண்டிப்பாக தன்னால் ஆட்சி கவிழாது என கூறியுள்ள நிலையிலும், அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு