நாங்கள் போட்டியிடவில்லை... சீட்டை திருப்பிக்கொடுத்த சரத்குமார்... செம்ம அதிர்ச்சியில் கமல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 15, 2021, 7:37 PM IST
Highlights

சரத்குமார் நானும், ராதிகாவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட உள்ளது அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல் அணி பெயர் வைக்கப்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தையும் நிறைவடைந்தது. ம.நீ.ம கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

1.துறைமுகம் 2.உத்திரமேரூர் 3. அரக்கோணம் (தனி) 4.சோளிங்கர் 5.ஆற்காடு 6.வாணியம்பாடி 7.ஆம்பூர் 8.ஜோலார்பேட்டை 9.போளூர் 10.உளுந்தூர்பேட்டை 11.ரிஷிவந்தியம் 12. ஆத்தூர் (தனி) 13. சங்ககிரி 14. திருச்செங்கோடு 15. அந்தியூர் 16. கிருஷ்ணராயபுரம் (தனி) 17. லால்குடி 18. கடலூர் 19.சிதம்பரம் 20.சீர்காழி (தனி) 21.திருத்துறைப்பூண்டி (தனி) 22.சிவகங்கை 23.மதுரை தெற்கு 24.பெரியகுளம் (தனி) 25. ராஜபாளையம் 26. விருதுநகர் 27.விளாத்திகுளம் 28.தூத்துக்குடி 29.திருச்செந்தூர் 30. ஒட்டப்பிடாரம் (தனி) 31. வாசுதேவநல்லூர் (தனி) 32.தென்காசி 33.ஆலங்குளம் 34. நெல்லை 35. அம்பாசமுத்திரம் 36,நாங்குநேரி 37.ராதாபுரம் 38.பத்மநாபபுரம் 39.விளவங்கோடு 40.கிள்ளியூர் என 40 தொகுதிகளில்  போட்டியிட உள்ளன. 

இன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடி- என்.சுந்தர், மதுரை தெற்கு - ஈஸ்வத், விளாத்திகுளம் - வின்சன், தென்காசி -தங்கராஜ், ராஜபாளையம் - விவேகானந்தன், சிவகங்கை -ஜோசப்
அம்பாசமுத்திரம் -கணேசன், கடலூர் -ஆனந்தராஜ், வாசுதேவநல்லூர் -சின்னசாமி, விருதுநகர் -மணிமாறன், திருச்செங்கோடு - ஜனகராஜ், நாங்குநேரி - சார்லஸ் ராஜா உள்ளிட்ட 37 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே வெளியிடப்பட்டன. 

செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் நானும், ராதிகாவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் எங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் 3 தொகுதிகளை திருப்பி கொடுத்துவிட்டோம் எனக் தெரிவித்துள்ளார். 


 

click me!