அனைவரது ஆழ்மனதிலும் இந்தியா என்ற பெயர் பதிவாகியுள்ள நிலையில், பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பாண்டியன் நகரில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான சரத்குமார் பேசுகையில், சமத்துவ மக்கள் கட்சி 2026ல் தேர்தலில் தனித்து போட்டியிடுவது நிச்சயம்.
நான் பார்த்த அரசியல் ஞானி கலைஞர் கருணாநிதி தான். சிறந்த தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் ஒரே கட்சி சமத்தவ மக்கள் கட்சி. இலவசம் என்பதை.மக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் பிரச்சினைகளை சமத்துவ மக்கள் கட்சியினர் மற்றும் மக்கள் அந்தந்த ஆட்சியர் அலுவலகங்களில் பிரச்சினை குறித்து புகார் தெரிவிக்க வேண்டும்.
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்; நாம் தமிழர் கட்சி தம்பிகளால் பரபரப்பான நீதிமன்ற வளாகம்
நான் சம்பாத்தித்து தான் கட்சியை நடத்த வேண்டும்., வரும் காலம். சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் மாற வேண்டும். தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் வாக்குக்காக அரசியல் கட்சியினரிடம் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஆட்சி மாறும். மக்களின் வாழ்வாதரம் பொருளாதாரம் மாறும்.
2 வருட காதல் கம்பி நீட்ட பார்த்த காதலனை காவலர்கள் துணையுடன் கரம் பிடித்த இளம்பெண்
அனைவரது ஆழிமனதிலும் இந்தியா என்ற பெயர் பதிவாகியுள்ள நிலையில், அதனை பாரத் என்று மாற்றம் செய்வது தேவையில்லாத வேலை. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை சரிசெய்துவிட்டு இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.