செல்போன்களில் பயமுறுத்தும் கொரோனா இருமல்...!! சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2020, 12:03 PM IST
Highlights

மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருமலுடன் துவங்கும் காலர்டுயுனை விழிப்புணர்வு வாக்கியமாக மட்டும்  துவங்குமாறும் மாற்றி  அமைக்க வேண்டும்

கொரோனா தொடர்பாக செல்போன்களில் வழங்கப்படும் பிரச்சாரங்கள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கவேண்டுமென சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார் .  சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது . எப்போதும் இல்லாத அளவிற்கு உலக அளவில் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு மிகுந்த பீதி அடைந்துள்ளனர் .  மேலும் அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . 

அதே நேரத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களில் பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வருகிறது , விரைவில் இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .  அதில் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள தொலைபேசியின் காலர் டியூன் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் அந்தந்த மாநில மொழிகளில் பாமர மக்களுக்கும் புரிய வகையில் அமைய வேண்டும் . 

வாடிக்கையாளர் சேவைக்கு எப்படி அந்தந்த மாநிலத்திற்கான மொழிகளில் ஏர்டெல் ,  வோடபோன் ,  ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சேவை அளிக்கின்றனவோ ,  அதுபோல வைரஸ் குறித்த விழிப்புணர்வு  மொழியினையும் அந்தந்த மாநில மொழிகளில் மாற்றவேண்டும் . மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருமலுடன் துவங்கும் காலர்டுயுனை விழிப்புணர்வு வாக்கியமாக மட்டும் துவங்குமாறும் மாற்றி  அமைக்க வேண்டும் என  அறிக்கையில் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார் .
 

click me!