கே.பி.முனுசாமி ஆதரவாளருக்கு பதவி – சமரசம் செய்யப்பட்ட சமரசம்

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
கே.பி.முனுசாமி ஆதரவாளருக்கு பதவி – சமரசம் செய்யப்பட்ட சமரசம்

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை தவிர, ஒரு முக்கிய நிர்வாகி கூட, அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சசிகலாவை வெளிப்படையாக எதிர்த்த கே.பி.முனுசாமியின், பக்கத்து தெருவை சேர்ந்தவர் கோ.சமரசம்.

எம்ஜிஆர் காலத்தில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சமரசத்தின் அனைத்து நல்லது கெட்டது விஷயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருபவர் கேபி முனுசாமி. இதனால், கே.பி.முனுசாமி மீது எப்போதும், கோ.சமரசத்துக்கு ஒரு கரிசனம் உண்டு.

அந்த வகையில் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அசோக் குமார் எம்பி, கோ.சமரசம் போன்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கேபி முனுசாமியின் பின்னால் அணிவகுப்பார்கள் என அதிமுக தலைமைக்கு எட்டியது.

இதையடுத்து அதிரடி சரவெடியாக, இனியும் காலம் தாழ்த்த கூடாது என்ற ரீதியில், கே.பி.முனுசாமியின்  ஆதரவாளர்கள் என கண்டறியப்பட்டவர்கள், தீபா பக்கம் திசை திரும்புகிறார்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள், அங்கும் இல்லை. இங்கும் இல்லை என அலை பாய்ந்து கொண்டருந்தவர்கள் என  அதிருப்தி மற்றும் அதிருப்தி இல்லாத பல முக்கிய தலைகளுக்கு கட்சியின் முக்கிய பதவி அதளித்து, தீபா மற்றும் கே.பி.முனுசாமி தரப்பினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது அதிமுக தலைமை.

80 வயதை கடந்துவிட்ட கோ.சமரசம், டிவி விவாதங்களில் மட்டுமே கலந்து கள்ள அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடத்தில் அதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஒதுங்கி இருந்த சமரசத்துக்கு பதவி தேடி வந்திருப்பது, கேபி. முனுசாமிக்கு வைக்கப்பட்ட செக் என அடித்து கூறுகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

எது எப்படியோ, அடிமட்ட தொண்டர்களிடம் அடக்கி வாசித்து வந்த அதிமுக தலைமை, தனது அதிரடி அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல்லாம்.

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்