ஜெ.வால் ஓரங்கட்டபட்டிருந்த செங்கோட்டையன், சைதை துரைசாமிக்கு முக்கிய பதவி - சசிகலா அதிரடி..!!

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஜெ.வால் ஓரங்கட்டபட்டிருந்த செங்கோட்டையன், சைதை துரைசாமிக்கு முக்கிய பதவி - சசிகலா அதிரடி..!!

சுருக்கம்

அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நிர்வாகிகள் நியமனம் முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிச. 5 அன்று அதிமுக பொது செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மரணமடைந்தார்.

அதன் பின்னர் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது.

அப்போது அதிமுகவில் ஒரு பிரிவினர் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்து நீங்கள்தான் கட்சி பொது செயலாளர் ஆக வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

அதில் செங்கோட்டையன் சைதை துரைசாமி, கோகுல இந்திரா, உள்ளிட்டோர் இருந்தனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, உள்ளிட்டோர் சசிகலாவுக்கு வாய்த்த கோரிக்கை மற்ற நிர்வாகிகளிடயே அதிர்ச்சியை எற்படுத்தியது.

அதன்பின்னர் தினந்தோறும் கட்சி நிர்வாகிகள் சசிகலாவை கோரிக்கை வைத்தது வழக்கம்.

இந்நிலையில் அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யபட்டார்.

சமீபகாலமாக கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே லேசான மோதல் போக்கு துவங்கியுள்ளதாக கருத்துகள் பரவலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் சுத்தமாக ஓரங்கட்டப்பட்ட சிலருக்கு கட்சியின் முக்கிய பதவிகளை சசிகலா வழங்கி உள்ளார்.

கட்சியின் மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட கோகுல இந்திரா போன்றவர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று சசிகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக அமைப்பு செயலாளர்களாக செங்கோட்டையன், சைதை துரைசாமி,கருப்புசாமி பாண்டியன், கோகுல இந்திரா, புத்தி சந்திரன், வரகூர் அருணாசலம், கே. கே உமாநாதன், எஸ்,அன்பழகன், கே. அண்ணாமலை உள்ளிட்ட 10 பேர் அமைப்பு செயளாலர்களாகவும்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் அணி செயலாளரகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சசிகலாவின் அறிவிப்பு முதல் பட்டியல் என்று கூறப்படுகிறது.

மேலும் சிலர் இன்னும் சில நாளில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்