கதவடைத்த திமுக, அதிமுக... பிரபல ரவுடிக்கு தஞ்சம் கொடுத்த தமிழக பாஜக..!

By vinoth kumarFirst Published Jan 4, 2020, 6:12 PM IST
Highlights

தமிழக பாஜகவை நோக்கி இப்போது பல்வேறு துறையினரும் பறந்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சினிமாத்துறையைச் சேர்ந்த நமீதா, துணை நடிகை ஜெயலட்சுமி, நடிகர் ராதாரவி என உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ரவுடி முரளி (42). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க.வில் யாரும் சேர்த்துக் கொள்ளாததால், சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி முரளி பாஜகவில் ஐக்கிய மாகியுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக பாஜகவை நோக்கி இப்போது பல்வேறு துறையினரும் பறந்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சினிமாத்துறையைச் சேர்ந்த நமீதா, துணை நடிகை ஜெயலட்சுமி, நடிகர் ராதாரவி என உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ரவுடி முரளி (42). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டிய நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் திமுக, அதிமுகவில் இணைய முயற்சித்தார். ஆனால், அக்கட்சி, ரவுடி முரளியை சேர்த்துக்கொள்ளவில்லை. 

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், வெள்ளி வியாபாரிகள் சிலரின் பரிந்துரைப்படி தமிழக பாஜகவின் இளைஞரணி மாநில தலைவர் வினோபா செல்வத்துக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைந்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு அக்கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக முக்கிய நிர்வாகி கூறுகையில் ரவுடி முரளியை பாஜகவில் இணைத்தது, அதிர்ச்சியளிக்கிறது. இது விவகாரம் தொடர்பாக தலைமைக்கு தெரியப்படுத்தி வினோபா செல்வம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

click me!