மிரண்டு போன டிடிவி ஆதரவாளர் புகழேந்தி - ஒரு வழியா முன் ஜாமின் வாங்கிட்டார்

Asianet News Tamil  
Published : Nov 16, 2017, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
மிரண்டு போன டிடிவி ஆதரவாளர் புகழேந்தி - ஒரு வழியா முன் ஜாமின் வாங்கிட்டார்

சுருக்கம்

Salem court has granted conditional support to the DDV Dinakaran supporter.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சேலத்தில் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்தது உள்ளிட்ட விவகாரங்களால்,  அன்னதானப்பட்டி போலீசார் தினகரன் மற்றும் புகழேந்தி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாகக் கூறப்பட்டது. இதனிடையே தாங்கள் இருவரும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், போலீஸாரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். 

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தினகரன், புகழேந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மேலும், போலீசார் பதிலளிக்கும் வரை, இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. 

இதைதொடர்ந்து முன் ஜாமின் கோரி சேலம் நீதிமன்றத்தில் புகழேந்தி மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி புகழேந்திக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ADMK TVK Alliance : சி.வி.சண்முகம் கையில் 30 MLA-க்கள்.! சுக்குநூறாக உடையும் அதிமுக..! TVK-க்கு ஆதரவு தர திட்டம்?
TVK Vijay: பெரும்பான்மை நெருக்கடியில் தவெக! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?