ஆவினில் ஆட்டுப் பால் விற்பனை... பால் வளத்துறை அமைச்சரின் அடிச்சுச் தூக்கும் அறிவிப்பு.!

Published : Oct 16, 2021, 08:02 PM IST
ஆவினில் ஆட்டுப் பால் விற்பனை... பால் வளத்துறை அமைச்சரின் அடிச்சுச் தூக்கும் அறிவிப்பு.!

சுருக்கம்

வருங்காலத்தில் ஆவினில் ஆட்டுப்பாலும் விற்பனை செய்யப்படும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.  

பால்வளத் துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், “ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு  விற்கக் கூடாது. அப்படி விற்றால் தன்னிடமோ அல்லது ஆவின் புகார் எண்ணிலோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அதுகுறித்து உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும். ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். பிறகு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
நாட்டு மாட்டுப்பாலை தனியாக விற்பனை செய்ய வேண்டுமென்றால், பாலைஒ ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவர வேண்டும். பின்னர் பாக்கெட் தயாரித்து அதில் விற்க வேண்டும். அதனால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும். வருங்காலத்தில் ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!