
சசிகலா, இளவரசி கைதி எண் வெளியானது....10, 711 மற்றும் 10,712......
சசிகலா இளவரசி சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பிறப்பித்தது உச்சநீதிமன்றம் . இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார். உடன் சசிகலாவின் அண்ணி இளவரசியும் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதி எண் வெளியானது
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா மற்றும் இளவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது கைதி எண் அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி, சசிகலா விற்கு.10, 711 மற்றும் இளவரசிக்கு 10,712 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறையில் அடைப்பு :
தற்போது சசிகலா மட்டும் இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன ஆக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர் .