
சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா பத்துகோடி ரூபாய் அபராதாம் ஆகியவற்றை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் மனுதலக்கல் செய்யபட்டது. ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இந்நிலையில், இன்று சசிகலாவும் அவரது அண்ணி இளவரசியும் சென்னையில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்னிலையில் சசிகலாவும், இளவரசியும் சரணடைந்தனர்.
பின்னர், அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா மற்றும் இளவரசியுடன் 5 கார்கள் சென்றன. அதில் சசிகலாவுக்கு தேவையான துணிகள் கொண்டு வந்த கார்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். வாகன ஓட்டுனரும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இதையடுத்து அங்கு போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் தமிழ்நாடு ஏன் கொண்ட வாகனங்களும் விரட்டியடிக்கப்பட்டன.