காங்கிரஸ் தலைவருக்கு மோடி அரசு வழங்கிய அவார்டு !!

Selvanayagam P   | others
Published : Dec 18, 2019, 08:21 PM IST
காங்கிரஸ் தலைவருக்கு மோடி அரசு வழங்கிய அவார்டு !!

சுருக்கம்

இந்த ஆண்டு ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருது  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது.  மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ தர்மனுக்கு வழங்கப்பட்டது. 

இதனிடையே ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருது, முன்னாள் மத்திய அமைச்சரும் , காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

“அன் எரா ஆப் டார்க்னஸ்” என்ற ஆங்கில  புத்தகத்திற்காக சசி தரூருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தவெக வரலாறு படைக்கும்.. விஜய் தான் அடுத்த சி.எம்! செங்கோட்டையன் சூளுரை!
ராமதாஸ் கூட்டணியா..? தெறித்து ஓடும் விஜய்.. தவெகவிலும் அடைக்கப்பட்ட கதவு..!