ஸ்டாலினை கண்டு நடுங்குதா அ.தி.மு.க? : உசுப்பிய உளவு சர்வே! அமைச்சர்கள் பாய்ச்சலின் அலேக் பின்னணி

By Vishnu PriyaFirst Published Dec 18, 2019, 6:47 PM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே தி.மு.க. தலைவர் ஸ்டாலினை மிக வன்மையாக திட்டிக் கொண்டிருக்கின்றனர் தமிழக அமைச்சர்கள். அதிலும் கடந்த 16-ம் தேதியன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தாறுமாறாக விமர்சித்துவிட்டனர் ஸ்டாலினையும், தி.மு.க.வையும். 

கடந்த சில நாட்களாகவே தி.மு.க. தலைவர் ஸ்டாலினை மிக வன்மையாக திட்டிக் கொண்டிருக்கின்றனர் தமிழக அமைச்சர்கள். அதிலும் கடந்த 16-ம் தேதியன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தாறுமாறாக விமர்சித்துவிட்டனர் ஸ்டாலினையும், தி.மு.க.வையும். 

இவர்கள் இருவர் மட்டுமில்லாது ஜாலி அமைச்சர் செல்லூர் ராஜூ முதற்கொண்டு முதல்வர், துணை முதல்வர் என எல்லோருமேதான் ஸ்டாலினை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர் விமரிசையாக. 

இந்நிலையில், தி.மு.க. மீது அ.தி.மு.க. அமைச்சரவை இப்படி ஆவேச தாக்குதல் நடத்திட காரணம் என்ன? என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் சில ஆய்வுகளையும், அலசல்களையும் அடிப்படையாக வைத்து சில விஷயங்களைக் கூறியுள்ளனர். 

“அதாவது தமிழக உளவுத்துறை போலீஸ் சத்தமில்லாமல் ஒரு ஸ்பீடு சர்வேயை ரேண்டமாக முக்கிய மாவட்டங்களில் நடத்தியது. அதன் ரிசல்ட்டில் குடியுரிமை சீர்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது, உள்ளாட்சி தேர்தலில் முறையான இட ஒதுக்கீடு முதலிட்டவற்றை ஏற்படுத்தாமல் தேர்தலை வரையறை செய்தது போன்றவற்றில் துவங்கி பல விஷயங்களில் ஆளும் அரசின் மீது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் கடும் கோபம்! என்று தகவல் வந்திருக்கிறது. 

மத்திய அரசு என்ன சொன்னாலும், தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஒரே நோக்கில் தமிழக ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் எனும் சித்திரமானது தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாக வேரூன்றி விட்டதாகவும் அந்த சர்வேயின் ரிசல்ட்டில் தெரிய வந்துள்ளது. 

தமிழக மக்களை இந்த அளவுக்கு சிந்திக்க தூண்டியது, பல விஷயங்களை அவர்களுக்கு தெளிவு படுத்தியது ஆகியவை மு.க.ஸ்டாலினின் தொடர் உரைகள், பேட்டிகள், போராட்டங்கள் ஆகியவற்றின் மூலமே! என்பதும் அந்த ஸ்பீடு சர்வேயில் துல்லியமாக விளங்கியுள்ளதாம்.  இதே லெவலில் போனால் எதிர்வரும் தேர்தல்களில் மக்களின் மன ஓட்டத்தை  முழுமையாக அ.தி.மு.க.வுக்கு எதிராக திருப்பி, மிக எளிதாக தி.மு.க. வென்றுவிடும்! என்று புரிந்திருக்கிறது உளவுத்துறைக்கு. 

இந்த சர்வே ரிப்போர்ட் அப்படியே அ.தி.மு.க. அமைச்சரவையின் கவனத்துக்குப் போக, அதைத்தொடர்ந்தே ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மீது சரமாரியான தாக்குதல்களை அமைச்சர்கள் துவக்கியுள்ளனராம்.
 
தொடர்ந்து ஸ்டாலினை விமர்சித்தும், அவரது தவறுகளை எக்ஸ்போஸ் செய்தும் வந்தால், நிச்சயம் மக்களின் மன ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும். தி.மு.க.வை வெறுக்க துவங்குவார்கள் அவர்கள்! எனும் முடிவை எட்டியே இந்த தாக்குதலை அமைச்சரவை துவங்கியுள்ளது. 
சொல்லப்போனால் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மீதான ஒருவித பயத்தில்தான் இந்த பாய்ச்சல் நடக்கிறது. ஆட்சியின் அவலட்சணங்களாக பட்டியலிடுவது மட்டுமில்லாது, ஸ்டாலினும் அமைச்சர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாலும் இந்த பகீர் பதில் தாக்குதலில் இறங்கியுள்ளனர். 

‘ஸ்டாலின் தன் பதவிக்கு ஏற்ப, தகுதிக்கேற்ப பேச வேண்டும். என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். அந்த தகுதியும், தராதரமும் அவருக்கு இல்லை. அவர் காந்தியில்லை, நான் புத்தனுமல்ல. அவரது முதுகில் ஆயிரத்தெட்டு அழுக்கு உள்ளது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினால், இந்த ஆண்டு முழுவதும் பேசலாம்!’ என்று சி.வி. சண்முகம் வெளுத்தார். 

அதேபோல் அமைச்சர் ஜெயக்குமாரும் ’எங்களைப் பற்றி தி.மு.க.வினர் தனிப்பட்ட முறையில் பேசுவது கண்டிக்கத் தக்கது. நீங்கள் கத்தியோடு வந்தால், நாங்கள் துப்பாக்கியோடு வருவோம். கோழைகள் அல்ல நாங்கள்.’ என்று தாக்கியிருந்தார். 

இப்படித்தான் எதிரும் புதிருமாக போகிறது தமிழகத்தில் இரு முக்கிய கட்சிகளும் நடத்தும் அரசியல்!” என்கிறார். 
க்கும்!
 

click me!