காவல்நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை.. 100 ஓட்டு கூட கிடைக்காது - நடிகர் எஸ்.வி சேகர் சுளீர்

By Raghupati R  |  First Published Jun 13, 2023, 12:10 AM IST

தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது என்று கூறியிருந்தார் அண்ணாமலை.


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா” என்று பேசியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டதில் ஈடுபட்டனர்.

தனியார் தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

 

இதையும் படிங்க..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக - பாஜக ஷாக் !!

சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையை நெட்டிசன்கள் மற்றும் அதிமுகவினர் கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிராக அதிரடியாக பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ காவல்நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை. அவர் மோடி, அமித்ஷாவை விட தன்னை பெரியவன் என எண்ணுகிறார்.

தன்னைவிட பெரியவர் எவரும் இல்லை அண்ணாமலை எண்ணுகிறார். பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென அண்ணாமலை நினைக்கிறார். பாஜக மாநில தலைவராக இருந்து எம்.எல்.ஏஏவாக கூட ஜெயிக்க முடியவில்லை. அண்ணாமலைக்கு பின்னால் 25 எம்பிக்கள் இருப்பார்கள் நினைக்கிறார்.

அவரால் 25 எம்பிக்கள் முன் நின்று போட்டோ மட்டுமே எடுக்க முடியும். அண்ணாமலை முயற்சியால் 100 ஓட்டுகள் கூட வாங்க முடியாது. 2 மாதத்தில் அண்ணாமலை எங்கே போவார் என தெரியவரும். அவர் சிறைக்கு செல்வாரா அல்லது கட்சியைவிட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எஸ்.வி சேகர்.

இதையும் படிங்க..ஏர் கூலர் + அரை நாள் போராட்டம்.. ஜெயலலிதா சர்ச்சை முடிவதற்குள் கருணாநிதியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை

click me!