
உக்ரைனில் மருத்துவம் படித்து போரினால் பாதிக்கப்பட்டு தாய் நாடு திரும்பியுள்ள மாணவர்கள் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரலாம் என ரஷியா அழைப்புவிடுத்துள்ளது. இது இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு மாணவர்களுக்கு ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. துவக்கத்தில் குகையில் எல்லைப்புறத்தில் தாக்குதல் நடத்திய ரஷ்யா தற்போது உக்ரேனில் மையப் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகள் பயின்று வந்தனர்.
உக்ரேனில் போர் காரணமாக மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் தாய் நாடுகளுக்கு சென்றுள்ளனர். அங்கு சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மத்திய அரசு நாடு திரும்ப தாய்நாடு அழைத்து வந்துள்ளது. இய்யில்தான் படிப்பை பாதியில் விட்டு நாடு திரும்பியுள்ள மாணவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த வகையில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி தேர்வு கே.ஆர்.ஓ.கே தேர்வு ஓராண்டு தள்ளி வைப்பதாக உக்ரேன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளன. இறுதியாண்டு கே.ஆர்.ஓ.கே 2 தேர்வு எழுதாமலேயே மருத்துவப் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்த தகவலை இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரேன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்பிய இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது கல்வியை ரஷ்யாவில் தொடங்கலாம் என ரஷ்ய பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. ரஷ்யாவில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் நடப்பாண்டிற்கான கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும் 2ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு 3ஆம் ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தடையின்றி படிப்பை தொடர ஏதுவாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படாது என்றும் ரஷ்ய பல்கலைகழகங்கள் உறுதியளித்துள்ளன.
இந்நிலையில் கிரீமியா, ஜார்ஜியா, ஆர்மோனியா, கஜகஸ்தான், போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் திரும்பியுள்ளனர். அவர்களின் தங்கள் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என அச்சத்தில் இருந்து வரும் நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மாணவர்களின் படிப்பைத் தொடர அழைப்புவிடுத்திருப்பது மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.