செங்கல்பட்டில் வேகம் எடுக்கும் கொரோனா..! கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மா.சு.

Published : Mar 28, 2022, 01:18 PM IST
செங்கல்பட்டில் வேகம் எடுக்கும் கொரோனா..! கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மா.சு.

சுருக்கம்

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் போராட்டம் நடைபெறுகிறது, பேருந்துகள் குறைவான அளவு இயக்கப்பட்டு வருகிறது, இந்தப் போராட்டம் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு, அதே வேளையில் மக்களுக்கு  பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றார்

சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது என்றும் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் முடிவு செய்து போராட்டம் நடந்து வருகிறது என தெரிவித்த அவர், மக்கள் பாதிக்கப்படாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.  ஆனாலும்  வரும் ஜூன் மாதத்தில் நான்காவது அலை ஏற்பட வாய்ப்பு  இருப்பதாகவும் எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் 90 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக் கவசம் இன்றி வெளியில் சகஜமாக சென்று வருகின்றனர்.  இந்நிலையுல் பெருமளவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்புகள் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பரவலாக கொரோனா தோற்ற அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 12.39 லட்சம் ரூபாயில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது, தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக இருந்து வருகிறது, மாநகராட்சி பள்ளி கட்டமைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தொண்டு நிறுவனங்கள் உறுதியாக உள்ளன என்றார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக குறைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதன் தொற்று சற்று அதிகமாக உள்ளது. அதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் போராட்டம் நடைபெறுகிறது, பேருந்துகள் குறைவான அளவு இயக்கப்பட்டு வருகிறது, இந்தப் போராட்டம் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு, அதே வேளையில் மக்களுக்கு  பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றார். மாண்புமிகு மேயர் என்பதை காட்டிலும் வணக்கத்திற்குரிய மேயர் என்பதுதான் சரியானது. கடந்த ஆட்சியில் மாண்புமிகு என்பதை மாற்றி அரசாணை வெளியிட்டனர். ஆனால் தற்போது ஆணையர் வணக்கத்திற்குரிய மேயர் தான் சரியாக இருக்கும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் என்றார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!