ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 6, 2021, 6:47 PM IST
Highlights

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாவட்டங்களுக்கு வரும் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாவட்டங்களுக்கு வரும் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்குப்பதிவு நேரம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும், வாக்குப்பதிவு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில்,  தமிழக மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவரவர் கருத்துகளை தெரிவித்தனர். 

இதனையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்;- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகள் பரிசீலிக்கப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

click me!