விநாயகர் சதுர்த்திக்கு தடை... ஒவ்வொருவரும் மு.க.ஸ்டலினுக்கு இதைச் செய்ய வேண்டும்... அண்ணாமலை வேண்டுகோள்..!

Published : Sep 06, 2021, 05:23 PM IST
விநாயகர் சதுர்த்திக்கு தடை... ஒவ்வொருவரும் மு.க.ஸ்டலினுக்கு இதைச் செய்ய வேண்டும்... அண்ணாமலை வேண்டுகோள்..!

சுருக்கம்

தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனி மனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரை பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனி மனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரை பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில், ’’மாண்புமிகு முதல்வர் அவர்களே, தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனி மனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரை பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர். இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் பிள்ளையார் உங்களுக்குப் புரிய வைப்பார்.

தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள், மாற்றுமத பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை நாம் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பாரதிய ஜனதாக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தமிழக முதல்வருக்கு ஒரு அஞ்சல் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?