சசிகலா உடல்நிலை குறித்த வதந்தி..! முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..!

Published : Oct 19, 2020, 09:33 PM IST
சசிகலா உடல்நிலை குறித்த வதந்தி..! முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..!

சுருக்கம்

சசிகலாவின் விடுதலை குறித்து அவ்வப்போது புயலாக செய்திகள் கிளம்பிக்கொண்டே இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்தும் அடிக்கடி வெளியாகும் செய்திகளால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றார்கள். அது குறித்து சசிகலாவே சிறையில் இருந்து விளக்கம் கடிதம் எழுதி இருக்கிறார்.  

சசிகலாவின் விடுதலை குறித்து அவ்வப்போது புயலாக செய்திகள் கிளம்பிக்கொண்டே இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்தும் அடிக்கடி வெளியாகும் செய்திகளால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றார்கள். அது குறித்து சசிகலாவே சிறையில் இருந்து விளக்கம் கடிதம் எழுதி இருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மைமையில் , சசிகலாவுக்கான அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதை கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

 சசிகலாவுக்கு சர்க்கரை பாதிப்பு இருப்பதால், சிறையில் கிடைக்கும் சிகிச்சைகள் போதாமல் வெளியே மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அவரது உறவினர்கள் விரும்புகிறார்கள் என்று செய்தி வெளியானது. மேலும், சசிகலா வெளியே இருந்த வரைக்கும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சர்க்கரை வியாதிக்கு மாத்திரைகள், ஊசிகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றி வந்துகொண்டிருந்தார். இதே மாதிரியான முறைகளை சிறைக்குள் அவரால் பின்பற்ற முடியததால், சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இதனால், அவரை உடனே வெளியே கொண்டு வந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், டயாலிசிஸ் வரைக்கும் கொண்டு போய்விடும் சிறுநீரக பாதிப்பு என அவரது உறவினர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றும் வெளியான செய்தியால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.


இந்த விவகாரத்தை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், கடிதம் மூலமாக சசிகலாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், அதற்கு சசிகலா எழுதியிருக்கும் பதில் கடிதத்தில், ‘’எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. நான் வணங்கும் இறைவன் ஆசியோடும்.என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக் கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி