ஜெயலலிதா வழியில் ஆட்சி..! எடப்பாடியாரிடம் சரண்டர் ஆன ஓபிஎஸ்..! பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Feb 16, 2021, 11:29 AM IST
Highlights

இது நாள் வரை ஜெயலலிதா ஆட்சி என்று மட்டுமே கூறி வந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தற்போது எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் நெறிபிறழாமல் ஆட்சி செய்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

இது நாள் வரை ஜெயலலிதா ஆட்சி என்று மட்டுமே கூறி வந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தற்போது எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் நெறிபிறழாமல் ஆட்சி செய்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவையில் அமைச்சர் எஸ்பி வேலுமணி 123 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு தலைமை ஏற்று ஓபிஎஸ் – இபிஎஸ் நடத்தி வைத்தனர். விழாவில் பேசிய ஓபிஎஸ் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று கூறினார். அத்தோடு தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் நெறி பிறழாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்வதாக கூறி அசர வைத்தார். ஓபிஎஸ் இப்படி ஒரு வார்த்தையை கூறுவார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கூட யாரும் எதிர்பார்க்கவில்லை. காரணம் இதற்கு முன்பு இது போன்ற வார்த்தைகளை ஓபிஎஸ் பயன்படுத்தியது இல்லை.

பொதுவாக எடப்பாடியுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பேசும் போது கூட தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடைபெறுகிறது, அம்மாவின் அரசு என்று மட்டுமே கூறுவது ஓபிஎஸ் வழக்கம். ஆனால் கோவையில் முதன்முதலாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி என்று கூறியிருப்பதன் மூலம் ஓபிஎஸ் நிலைப்பாட்டில் மாற்றம் தெரியவந்துள்ளது. அதாவது சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொள்வது தான் சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு ஓபிஎஸ் வந்துள்ளது தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதற்கு முன்பு வரை ஓபிஎஸ் வேறு ஒரு மனநிலையில் இருந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் மோடி வந்த சென்ற பிறகு அதுவும் மோடி – எடப்பாடியின் அந்த பத்து நிமிட பேச்சு ஓபிஎஸ் மனதை மாற்றியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் தான் நேற்றைய தினம் மாலையில் தேனியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஓபிஎஸ், 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க விரைவில்  தேர்தல் பணிகளை துவங்க உள்ளதாகவும் ஓபிஎஸ் அறிவித்தார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவருக்காக ஓபிஎஸ் தற்போது வரை பிரச்சாரத்தை முன்னெடுக்காமல் இருந்து வந்தார். ரஜினி அரசியல் வருகை தொடர்பான அறிவிப்பிற்கு பிறகு அவருக்கு சாதகமாக சில கருத்துகளை கூறி வந்தார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் கூட சசிகலாவிற்கு எதிராக எதுவும் பேசாமல் ஓபிஎஸ் அமைதி காத்தார். அதே சமயம் ஓபிஎஸ் இளைய மகன் சசிகலா உடல் நலம் பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி சட்டமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதில் ஓபிஎஸ்சிடம் குழப்பம் நீடித்தது. ஆனால் மோடி சென்னை வந்து சென்ற பிறகு பாஜக – அதிமுக கூட்டணி இறுதியாகிவிட்டது. மேலும் சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பாஜக கூறி வருவதாக தினகரன் தரப்பு அவிழ்த்துவிட்ட வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

எனவே தற்போதைய நிலையில்  அதிமுக மேலிடம் எடுத்துள்ள முடிவின் படி எடப்பாடி பழனிசாமிக்காக தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவது என்கிற முடிவுக்கு ஓபிஎஸ் வந்துள்ளார். அதிலும் சசிகலா தரப்பு ஓபிஎஸ்சுக்கு எதிராக தற்போது சில காய் நகர்த்தல்களை செய்து வருவதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால் எடப்பாடிக்கு இணக்கமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சசிகலா தரப்பு தொடர்பு கொண்டதாக சொல்கிறார்கள். இதனை அறிந்தே ஓபிஎஸ் சுதாரித்துக் கொண்டு எடப்பாடியிடம் சரண்டர் ஆகிவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

click me!