ரூபி மனோகரன் சஸ்பெண்ட் உத்தரவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
ரூபி மனோகரன் சஸ்பெண்ட் உத்தரவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட அடிதடி தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையில் கலந்து கொள்ள 15 நாள் அவகாசம் கேட்டு ரூபி மனோகரன் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் மற்றொரு தரப்பான ரஞ்சன் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: சமாதானமாக போன டெய்சி சரண்-திருச்சி சூர்யா... ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன காயத்திரி ரகுராம்!!
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளும் வரை, ரூபி மனோகரன் தற்காலிகமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை இயற்கை நீதி கொள்கைக்கு எதிரானது என தெரிவித்து சஸ்பெண்ட் உத்தரவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நிறுத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி சூர்யா சிவா பாஜக-வில் இருந்து நீக்கம்…. அண்ணாமலை அதிரடி நடவடிக்கை!!
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்துள்ள சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன். மேலும் இதில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், ஒழுங்கு நடவடிக்கை குழு செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.