தமிழகத்தில் வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டம்.. பகீர் கிளப்பும் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ..!

By vinoth kumar  |  First Published Sep 26, 2022, 11:36 AM IST

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும். மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இயக்கமாக கருதப்பட்டது. அந்த இயக்கம் மாத்மா காந்தி பிறந்த தினத்தை ஒட்டி பேரணி நடத்துவது கண்டனத்திற்குரியது. 


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான சோதனை மாநில உரிமையை பறிக்கும் செயலாகும் என எம்எல்ஏ அப்துல் சமத் குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமத் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும். மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இயக்கமாக கருதப்பட்டது. அந்த இயக்கம் மாத்மா காந்தி பிறந்த தினத்தை ஒட்டி பேரணி நடத்துவது கண்டனத்திற்குரியது. 

Tap to resize

Latest Videos

undefined

மேலும் படிக்க;- அடுத்து என்ன நிகழுமோ? அச்சத்தில் தமிழக மக்கள்.. கவலையில் ராமதாஸ்..!

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை பெற வேண்டும். தமிழகம் அமைதி பூங்காவாகவும், ஜாதி மோதல் இல்லாத மாநிலமாகவும் விளங்குகிறது. இதை வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வன்முறை என்பதை யார் செய்தாலும் அவர்கள் மீது சட்டபூர்வமாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். 

அதே சமயம் சிலர் தங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தங்களுக்கு தாங்களே வன்முறை சம்பவங்களை அரங்கேற்றும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான சோதனை மாநில உரிமையை பறிக்கும் செயலாகும் என அப்துல் சமத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க;-  தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க முயற்சி.? சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

click me!