ரூ1. லட்சத்தை கட்டமுடியலயா..? #வரிகட்டுங்க_விஜய்

Published : Jul 13, 2021, 02:58 PM IST
ரூ1. லட்சத்தை கட்டமுடியலயா..? #வரிகட்டுங்க_விஜய்

சுருக்கம்

ஒரு படத்திற்கு 50- 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய் ரூ.1 லட்சத்தை வரியாக செலுத்த மாட்டாரா? 

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில்  #வரிகட்டுங்க_விஜய் என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ’’நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’என கண்டனம் தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒரு லட்சம் அபராத தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 

#வரிகட்டுங்க_விஜய் என்கிற ஹேஷ்டேக்கில் ஒரு படத்திற்கு 50- 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய் ரூ.1 லட்சத்தை வரியாக செலுத்த மாட்டாரா? கோடி ரூபாய்க்கு கார் வாங்கிய விஜயால் வரி கட்ட முடியாதா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!