அரசு மவுனத்தால் மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிப்பு.. முதல்வர் மீது பாயும் எடப்பாடி பழனிச்சாமி..!

By vinoth kumarFirst Published Jul 13, 2021, 2:44 PM IST
Highlights

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?" என முதல்வரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நீண்டகாலமாக மவுனம் காத்ததால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாக மாறி விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசே காரணம் என்றும், 7.5% உள் ஒதுக்கீட்டில் மாணவர்கள் இடம் பெற உரிய நடவடிக்கையாவது தமிழக அரசு எடுக்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இன்று தனது டுவிட்டர் பதிவில்;- இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?" என முதல்வரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, எங்கள் அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு எங்கள் அரசு அளித்ததுபோல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

click me!