விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்... கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா உறுதி..!

By Thiraviaraj RMFirst Published Jul 13, 2021, 1:19 PM IST
Highlights

தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை. மத்திய  அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம்.

மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தப்பின் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ‘’மத்திய  அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் எனவும் கூறினார். தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை. மத்திய  அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம். விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும்'’எனத் தெரிவித்துள்ளார்.

 ஜல ஜீவன் குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கர்நாடகா மாநிலம் பெங்களூரூ சென்றார். அங்கு அவரை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மாநில சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சிறு நீர்பாசனத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது, மேகதாது அணைக்கான ஒப்புதல் தொடர்பாக கர்நாடக அரசு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை தொடர்பாக கர்நாடாக முதலமைச்சர் பேசியிருப்பதும், விரவில் மேகதாது அணை கட்டப்படும் என எடியூரப்பா தெரிவித்து இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

click me!