தேர்தலில் பாஜக 116 இடங்களுக்கு மேல் தாண்டாது.!இந்தியா கூட்டணி 300 இடங்களை பிடிக்கும் - ஆர்.எஸ் பாரதி நம்பிக்கை

By Ajmal Khan  |  First Published Mar 4, 2024, 6:50 AM IST

திமுக வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுவதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை  திமுகவை தடை செய்வேன் என்று பேசியது தான் எம்ஜிஆருக்கு அது தான் கடைசி பேச்சு என கூறினார். 


தமிழகத்தில் பொய்யை பேசும் மோடி

எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறத்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் தேரடித்தெருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் எந்த திட்டம் இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அனைவரும் பயன்பெற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் வந்து பொய்யை சொல்லிட்டு போகலாம் என்று பிரதமர் மோடி நினைக்கின்றார். அரசின் பணத்தில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகின்றார் மோடி வந்தார், ஜல்ஜீவன் திட்டம் தந்தார் என்று, அதற்கு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கி ஜீவன் தந்தவரே கலைஞர் தான் என தெரிவித்தார். 

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள்.?

50 ஆண்டுகளுக்கு முன் திமுக செய்த திட்டங்களை தற்போது செய்யப்போகின்றோம் என மோடி கூறி வாக்கு கேட்கின்றார் . நரேந்திர மோடி வாரம் ஒரு முறை சென்னை வருகின்றார். தேர்தலுக்குள் 10 முறை தமிழகம் வருவதாக தெரிவித்துள்ளார். திமுக வரலாறு தெரியாமல் பேசுகின்றார் மோடி. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை  திமுகவை தடை செய்வேன் என்று பேசியது தான் எம்ஜிஆருக்கு கடைசி பேச்சு.எனவே  மோடியின் நிலை என்ன.? என்பதை அவர் பார்த்துக்கொள்ளட்டும். மற்றக்கட்சியில் வெற்றி பெற்று வருபவர்களை பணம் கொடுத்தும் வாங்கும் வேலையை மோடி செய்கின்றார்.

116 இடங்களுக்கு மேல் பாஜக தாண்டாது

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார் மோடி. அதிமுக தாய் இல்லா பிள்ளையாக அனாதையாக உள்ளனர். அதிமுகவை யாரும் திட்டாதீர்கள், அவர்கள் குழம்பி போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 116 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது, 300 இடங்கள் இந்தியா கூட்டணி பிடிக்கும் 127 நடுநிலை வகிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் திமுக 40க்கு 40 வெற்றி பெறும் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா.? காங்கிரஸ் கட்சி திடீர் தீர்மானம்

click me!