கெஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்களை மத்திய அரசு தொடர்ந்து கைது செய்ய துடிக்கிறது என தெரிவித்துள்ள ஆர்எஸ் பாரதி, யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் கால் முடியை கூட தொட்டுப் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.
ஆண்களுக்கு ஊக்கதொகை- டாஸ்மாக் போயிடுவாங்க
தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக நெல்லை பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அல்வா வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்து அவர்கள் படிப்பை தொடர முதல்வர் உதவி வருகிறார். முதல்வரின் ஊக்கத்தொகை பெறும் இளம் பெண்கள் வருங்காலத்தில் மருத்துவர் ஆட்சியர் உயர் அதிகாரிகள் பொறுப்பில் கண்டிப்பாக அமர்வார்கள். அதே நேரத்தில் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் டாஸ்மாக் போய்விடுவார்கள் என தெரிவித்தார்.
கலைஞர் இறப்பிற்கு விஜயகாந்த் துரோகம்
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த்த போது அண்ணா அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய ஆறடி இடம் கொடுக்காமல் எடப்பாடி மறுத்தார். அப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி, ஆனால் யாரும் கேட்காமலே விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். தனியாக நிற்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வராக இருந்திருப்பார். கலைஞர் முதலமைச்சராக இருந்திருப்பார் முதலமைச்சராகிய தைரியத்துடன் கூட கலைஞர் உயிரோடு இருந்திருப்பார். கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தற்போது வரை இருந்திருப்பார்.
வெள்ளரிக்காய் கூட கொடுக்கமுடியாது
விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார். கலைஞர் இறக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான் என விமர்சித்தார். மத்திய அரசு எதிர்கட்சிகளை நீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ மூலம் மிரட்டுகிறது. ஒரு ஆட்சி அழியும் முன்பு இப்படித்தான் நடக்கும். 1977-இல் போன்ற சம்பவங்கள் நடந்தது. கெஜிர்வால் உள்ளிட்ட முதல்வர்களை மத்திய அரசு தொடர்ந்து கைது செய்ய துடிக்கிறது. யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் கால் முடியை கூட தொட்டுப் பார்க்க முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. ஆணாகப் பிறந்து வீணாகப் போனவர் அண்ணாமலை, பொய் பேசுவதில் நம்பர் ஒன் அண்ணாமலை. வெள்ளை அறிக்கை கேட்கிறார் வெள்ளரிக்காய் கூட தர முடியாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்