எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலை வரும்..! ஆர் என் ரவிக்கு ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை

By Ajmal Khan  |  First Published Aug 23, 2023, 6:29 AM IST

இன்னும் ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது அனைவருக்கும் தெரியும் என ஆர்எஸ் பாரதி கூறினார்.
 


எடப்பாடி புரட்சி தமிழரா.?

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக மாநாட்டில் புரட்சி தமிழர் என எடப்பாடி பழனிசாமிக்கு  பட்டம் கொடுத்துள்ளார்கள்.  எம்ஜிஆர் ஒரு மலையாளி ஜெயலலிதா ஒரு கன்னடத்தவர் என எம்ஜிஆர் ஜெயலலிதாவை காட்டிக் கொடுப்பது போல் உள்ளது என பதிலளித்தார்.

Tap to resize

Latest Videos

இது திமுகவின் கருத்து இல்லை, தனது தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார். நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்ததற்கு காரணமே எடப்பாடி தான். நீட் நடத்துவதற்கு  எடப்பாடி தான் முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார். சென்னை என்ற பெயரை மாற்றி 30 வருடம் ஆகிறது ஆனால் அதன் பெயரை மெட்ராஸ் என குறிப்பிடுகிறார் என்றால் தமிழ்நாட்டை ஆளுநர் சீண்டி பார்க்கிறார்.

ஆளுநர் தனது வேலையை செய்யவில்லை

தமிழகத்தின் பாடநூல்களை பல்கலைக்கழகங்களில் படிக்கக்கூடாது  என்ற உத்தரவையும் பிறப்பிக்க போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற செய்திகளை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் இதற்கான பல விளைவை ஆளுநர் சந்திப்பார் என கூறினார்.  தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவிக்கு தமிழக அரசின் சார்பாக சைலேந்திரபாபு அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளிப்பதுதான் தான்  முறையானது. ஆனால் திட்டமிட்டு ஆளுநர் மறுப்பதற்குரிய உள்நோக்கம் என்ன என்பதை ஆளுநர் விளக்க வேண்டும் என கூறினார். தமிழ்நாடு ஆளுநர் அவர் வேலையை தவிர்த்து பிற வேலையை செய்து வருகிறார்.  இதுவரை எந்த சமுதாயத்தில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லையோ அவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு பரிந்துரைக்கப்பட்டார். 

ஆளுநருக்கு திமுக எச்சரிக்கை

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி  தலைவராக  நியமிப்பதை ஆளுநர் எதிர்ப்பது புறக்கணிப்பது கண்டனத்திற்கு உரியது எனவும் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இவ்வாறு செய்து வருவதாகவும் விமர்சித்தார்.  சைலேந்திரபாபுவை திமுக சார்பாக நியமிக்கவில்லை. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதின் அடிப்படையில் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார்.

காவல்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் தான் அவரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இன்னும் ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும் என கூறினார்.  எங்களுக்கென்று(திமுக) ஒரு வழிமுறை இருக்கிறது எங்களை கின்டி பார்த்தால் சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலை வரும் என  ஆளுநர் ஆர் என் ரவிக்கு ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படியுங்கள்

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை.! பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ரவியின் கடிதத்தால் பரபரப்பு

click me!