முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த முறை அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ரூ.58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடும்பத்தினர் மீது லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த முறை அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், எஸ்.பி.வேலுமணி, அன்பரசன், ஹேமலதா, சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணவரதன், சரவணகுமார் மற்றும் 3 நிறுவனங்களும் அடங்கும்.
undefined
இதையும் படிங்க;- DVAC Raid: எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் மீண்டும் சோதனை.. அதிர்ச்சியில் அதிமுகவினர்.!
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தொடரப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்திருந்த சொத்துகளின் அடிப்படையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதல் தகவலறிக்கையின்படி, 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில், அவருக்கு தொடர்புடைய சுமார் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 6 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் ஒரு இடத்திலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த முறை சோதனை நடந்த போது முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை எஸ்.பி.,வேலுமணி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.